தூத்துக்குடி மாவட்டம், கூத்தன்குளி பாண்டியபதி திடலில் நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை சார்பில், (21.11.2025) இன்று அற்புதமான திரளான பொதுமக்கள் பங்கேற்புடன் ‘கடலம்மா மாநாடு’ சிறப்பாக நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாடு “ஆதி நீயே… ஆழித் தாயே…” என்ற முதன்மை தலைப்பில் நடைபெற்றது.
மீனவர் உரிமைகள் – கடலையும், வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டிய அவசியம்
மாநாட்டில் உரையாற்றிய சீமான் அவர்கள், கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும், கடல் இடத்தை காக்க வேண்டும், மீனவர்களின் வாழ்வாதார முன்னேற்றம் கட்டாயம்,
என்று வலியுறுத்தினார். மேலும், “கடல் வளம் காத்து எதிர்கால தலைமுறைக்கு இயற்கை என்னும் பொக்கிஷத்தை நாமே வழங்க வேண்டும்” என அவர் அழுத்தமாகப் பேசினார்.
அத்துடன் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள், கட்சி கடந்து வந்த பாதை, சந்தித்த சவால்கள், அதில் கிடைத்த வெற்றிகள் ஆகியவற்றையும் விரிவாக விளக்கினார். திடலின் அனைத்து நுழைவாயில்களிலும் பொதுமக்கள் பெரும்திரளாகக் கூடி, பூரண ஆதரவு தெரிவித்தனர்.
சகா கலைக்குழு மேடை அதிர வைத்த கலைநிகழ்ச்சிகள் நிகழ்வில் தூத்துக்குடி முனைவர் சகா. மா. சங்கர் அவர்களின் சகா கலைக்குழு சிறப்பான கலைநிகழ்ச்சிகளை வழங்கினர்.
குறிப்பாக, 35 பேர் இணைந்து வாசித்த தோல் பறை இசை – திடலை அதிர வைத்தது. ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மாடுஆட்டம், உவரி கலைமாமணி, அந்தோணிசாமி குழுவின் கழியல் ஆட்டம், மீனவர் பாரம்பரிய கோலாட்டம், சிலம்புக்கலை இதுபோல பல நாட்டுப்புறக் கலைகள் மேடை முழுவதும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தின.
இந்த மாபெரும் கடலம்மா மாநாட்டை விழா குழுவினரும், நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை உறுப்பினரும் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
– கலையும் கல்வியும்
சகா கலைக்குழு, தூத்துக்குடி