Breaking News

தூத்துக்குடி திமுக ஆட்சியில் ‘ஒவ்வொரு குடும்பத்திலும் நன்மை’ – மழைப் பாதிப்பு பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!

  • Share on

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 19, 20, 21 ஆகிய நாட்களில் பெய்த வடகிழக்கு பருவமழையால் சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் நடைபெற்று வரும் தூர்வார்ப்பு மற்றும் வடிகால் மேம்பாட்டு பணிகளைத் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன்.

இதன் பகுதியாக, மாநகராட்சியின் 11வது வார்டில் உள்ள எழில் நகர் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, அங்கு தூர்வாரப்பட்ட பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய்களை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் ஊடகங்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது:

“கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் அடிப்படை வசதிகள் எந்த விதத்திலும் உருவாக்கப்படவில்லை. அதனால் மக்களுக்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டன. 2021-ல் திமுக ஆட்சி அமைந்த பின், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 234 தொகுதிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு கட்ட நிதி ஒதுக்கீடுகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டில் 9 சென்டிமீட்டர் அதிகமாக மழை பெய்திருந்தாலும், புதிய வடிகால் வழித்தடங்கள் காரணமாக பெரும்பாலான இடங்களில் நீர் தேங்கவில்லை. சில தனிப்பட்ட காலி மணைகள் மட்டுமே பாதிக்கப்பட்டன, அவற்றிலும் மின்மோட்டார் அமைப்புகள் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது.”

அவர் தொடர்ந்தும் கூறினார் “கடந்த நான்கரை ஆண்டுகளாக திமுக ஆட்சியில் ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒரு வகையில் நன்மை அடைந்துள்ளது. புதிய தார் சாலைகள், சிறுகுறு சந்து பேவர் பிளாக் சாலைகள் முதலான பல்வேறு மேம்பாட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருவதும் மக்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கின்றது.

எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ அப்போதெல்லாம் தமிழகத்திற்கு அது பொற்காலம். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடலின் அடிப்படையில் செயல்படும் இந்த அரசு, பொதுமக்களின் உரிமைகளைப் பெற ஒன்றிய அரசிடம் தொடர்ந்து போராடும் கொள்கையோடு செயல்படுகிறது. எந்த அளவிலான மழை வந்தாலும், பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்கள் எந்தவித அச்சமும் கொள்ள வேண்டாம். மக்கள் பணியே எங்களின் கடமை.”

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் தெய்வேந்திரன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர், மணி, அல்பர்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


  • Share on

தூத்துக்குடியில் திமுக இளைஞர்களுக்கு ஊக்கமளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் – “முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி எண்ணங்களை நிறைவேற்ற வேண்டும் இளைஞர் அணி”

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் எம்பி கனிமொழி கருணாநிதி இரண்டு முக்கிய விளையாட்டு வளாகங்களை திறந்து வைத்தார்!!

  • Share on

Trending News