Breaking News

தூத்துக்குடியில் எஸ்.ஐ.ஆர் பரபரப்பு! – “வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் அரசியல் தலையீடு” தவெக் நிர்வாகி ஆனந்தகுமார் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!!

  • Share on

தூத்துக்குடி வாக்காளர் சுருக்கப் பணியான எஸ்.ஐ.ஆர் (Special Intensive Revision) செயல்பாட்டில் ஆளும் கட்சியினரின் தலையீடு அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டை முன்னிறுத்தி, தவெக நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஆனந்தகுமார் மாவட்ட ஆட்சியரிடம் அதிரடி கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார். இந்த கோரிக்கை தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய குற்றச்சாட்டுகள் என்ன?

வீடுவீடாகச் சென்று பிஎல்ஓக்கள் விண்ணப்பங்களை வழங்கி, சரிபார்த்து பெற வேண்டிய நிலையில், சில பகுதிகளில் திமுகவினர் மொத்தமாக விண்ணப்பங்களை வாங்கி, தாங்களே வீடு வீடாகச் சென்று வழங்குவதாக தவெகவினர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக முத்துகிருஷ்ணாபுரம் – வார்டு 23 பகுதியில்,

பட்டியலில் உள்ள 5500 வாக்காளர்களில் 2500 பேர் வெளியே சென்றவர்களாக இருந்தும்,

ஆளுங்கட்சியினர் பரிந்துரைக்கும் நபர்களுக்கு பத்திரங்கள் வழங்கப்பட்டு,

வெளிநகரம் சென்றவர்களுக்கும் இப்பகுதியில் வசிப்பவர்கள் எனப் பதிவுகள் செய்யப்பட்டு வருகிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கோவில் முன்பு இரவு நேரங்களில் ஆளுங்கட்சியினர் மற்றும் சில ஆசிரியர்கள் சேர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து, வீடு வீடாகச் செல்லாமல் வாக்காளர் படிவ திருத்தப் பணியை நடத்தி வருகின்றனர் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

“தலையீடு இல்லாமல் எஸ்.ஐ.ஆர் நடைபெற வேண்டும்” – ஆனந்தகுமார் கோரிக்கை

வெளிநகரம் சென்றவர்கள், இறந்தவர்கள், இரட்டைப் பதிவு ஆகியவற்றை நீக்குவது எஸ்.ஐ.ஆர் பணியின் நோக்கமாக இருந்தும்,
அது அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுவது மிகப்பெரிய ஆபத்து என தவெகவினர் எச்சரித்துள்ளனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் தீவிர கோரிக்கை

தமிழக வெற்றி கழகம் சார்பில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலும்,

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்

ஆளுங்கட்சியினர் தலையீடு முற்றாக நிறுத்தப்பட வேண்டும்
என பல்வேறு நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

இந்த சூழ்நிலையில், மாவட்ட ஆட்சியருக்கு ஆனந்தகுமார் வழங்கிய கோரிக்கை தூத்துக்குடியில் எஸ்.ஐ.ஆர் பணியைச் சுற்றிய அரசியல் சூழ்நிலையை தீவிரமாக்கியுள்ளது.


  • Share on

ஓம் சாந்தி நகரில் மழைநீர் வெளியேற்றப் பணிகள் தீவிரம் — மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல் முறைகேடு: டிஎஸ்எப் அணியினர் குற்றச்சாட்டுகள் – “வரும் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெல்வோம்”!!

  • Share on

Trending News