Breaking News

“நன்னீர் நாயகன் குரூஸ் பர்னாந்துவின் 156வது பிறந்தநாளை முன்னிட்டு — தூத்துக்குடி மாநகர மதிமுகவினர் மரியாதை செலுத்தினர்”

  • Share on

தூத்துக்குடி நகரத்திற்கு சுத்தமான குடிநீர் திட்டங்களை உருவாக்கி, நகர வளர்ச்சியில் மறக்கமுடியாத பங்களிப்பு செய்த முன்னாள் நகர மன்ற தலைவர் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களின் 156வது பிறந்தநாள் நினைவேந்தல் நிகழ்வு, தூத்துக்குடி மாநகர மதிமுக சார்பில் மரியாதையுடன் நடைபெற்றது.

தூத்துக்குடியில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாநில வெளியீட்டு அணி செயலாளர் நக்கீரனும் மரியாதை செலுத்தினார்.

நிகழ்வில் மாநகர துணை செயலாளர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி செந்தாமரை கண்ணன், எம்எல்எப் தலைவர் காசி, தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணப்பெருமாள், வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு குரூஸ் பர்னாந்துவின் சமூகப் பணிகளை நினைவுகூர்ந்தனர்.


  • Share on

“தூத்துக்குடி மக்களின் நீர் நாயகனை நினைவுகூர்ந்த சமத்துவ மக்கள் கழகம் – குரூஸ் பர்னாந்துவிற்கு மரியாதை”

“குரூஸ் பர்னாந்துவின் 156வது பிறந்தநாளில் — தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்” — காங்கிரஸ் கோரிக்கை!!

  • Share on

Trending News