புதூர் ஊராட்சி ஒன்றியத்தின் கந்தசாமிபுரம் ஊராட்சிக்குட்பட்ட P. ஜெகவீரபுரபுரம் கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிகள் தொடங்கின.
இந்த பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், ராஜாராம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயமித்ரா, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் செல்லப்பாண்டி, மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், கிளைச் செயலாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.