Breaking News

பெண்கள் பாதுகாப்பு கோரியும், கோவை பாலியல் வன்முறைக்கு எதிராகவும் தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!

  • Share on

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், கோவை கூட்டு பாலியல் வன்முறைக்கு எதிராகவும் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC), மற்றும் தூத்துக்குடி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் இன்று (நவம்பர் 7, 2025) மாலை VVD சிக்னல் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலிருந்தும் காங்கிரஸ் கட்சியினர், தொழிற்சங்க காங்கிரஸ் உறுப்பினர்கள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பெண்கள் பாதுகாப்பு கோரி கோஷங்கள் எழுப்பினர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும், பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு INTUC மாநில பொதுச் செயலாளருமான பெருமாள் சாமி கதிர்வேல் அவர்கள், “பெண்கள் பாதுகாப்பில் அரசு தோல்வியடைந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. போதைப்பொருட்கள் மற்றும் மது பழக்கமே பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குக் காரணம். அரசு உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கோவை பாலியல் வன்முறை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்காக தனி சட்டம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனக் கண்டனம் தெரிவித்தார்.

மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் தன லெட்சுமி, துணைத் தலைவி இசக்கியம்மாள், மாவட்ட செயலாளர் பேச்சியம்மாள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொழிற்சங்க காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் மகிளா காங்கிரஸ் பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர்.


  • Share on

மெய்ஞானபுரம் மாணவர் ஜான் பால் — மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் முதல் பரிசு வென்று பெருமை சேர்த்தார்!

கடம்பா குளத்தின் உபரி நீர் வடிகால் வாய்க்காலின் ஆத்தூரின் கீழ்பகுதி சுத்திகரிப்பு பணி தொடக்கம்!!

  • Share on

Trending News