Breaking News

மழைநீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு – “திமுக ஆட்சியே அடிப்படை பணிகளின் பொற்காலம்”!!

  • Share on

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி முழுவதும் கடந்த 19, 20, 21 ஆகிய நாட்களில் பெய்த வடகிழக்கு பருவமழையால் சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதைத் தொடர்ந்து, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அவர்கள் இன்று நிகிலேஷன் நகர் பி அண்ட் டி காலனி உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது பேசிய அமைச்சர் கீதாஜீவன் அவர்கள்,

“கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ரூரல் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் 2021ல் திமுக ஆட்சி அமைந்தபின், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 234 தொகுதிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்,” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது “கடந்த ஆண்டுகளில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், இம்முறை தண்ணீர் தேங்காமல் இருக்க புதிய கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி பகுதியில் இதுவரை சராசரியாக 9 சென்டிமீட்டர் கூடுதலாக மழை பெய்திருந்தாலும், பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தானாகவே வெளியேறியுள்ளது. சில பகுதிகளில் மட்டுமே மின்மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.”

“கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் நன்மை அடைந்துள்ளனர். திமுக ஆட்சி என்றாலே அது தமிழகத்தின் பொற்காலம். ஏனெனில் திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை நோக்கம் — ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்பதே. பொதுமக்களின் உரிமைக்காக மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து போராடி பல நன்மைகளை உறுதிசெய்து வருகிறார்,” என்று அமைச்சர் கீதாஜீவன் வலியுறுத்தினார்.

“இந்த முறை எந்த அளவுக்குத் திடீர் மழை பெய்தாலும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அரசு முன்கூட்டியே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. எனவே மக்கள் எந்த வித அச்சத்திலும் இருக்கத் தேவையில்லை,” என்று கூறினார்.

ஆய்வில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் கண்ணன், ஜான், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், வேல்முருகன், மணி, அல்பட் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


  • Share on

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் 40 கழிவு வாகனங்கள் – நவம்பர் 11 அன்று பொது ஏலம்!

ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா தலைமையில் டேவிஸ்புரத்தில் 5ஆவது ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் – தேவர் ஜெயந்தியை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்!

  • Share on

Trending News