Breaking News

மாநகராட்சி கூட்டத்தில் 50வது வார்டு வளர்ச்சி பணிகள் குறித்து கவுன்சிலர் சரவணகுமார் பேச்சு!!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் இன்று காலை மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் ப்ரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நகர வளர்ச்சியைச் சார்ந்த பல முக்கிய தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டன. இந்நிலையில் 50வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார் தமது வார்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக பேசி கருத்து தெரிவித்தார்.

தமது வார்டில் சாலை புனரமைப்பு, குடிநீர் வசதி மேம்பாடு, மழைநீர் வடிகால் அமைப்பு உள்ளிட்ட பல பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதல் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாநகராட்சி நிர்வாகம் மக்கள் நலனுக்காக வேகமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர் சரவணகுமார் வலியுறுத்தினார்.

கூட்டத்தில் மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


  • Share on

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி – 103 ஆண்டுகளின் இலாபப் பயணத்தில் புதிய மைல்கல்: இரண்டாம் காலாண்டில் சாதனை நிகர லாபம்!!

பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை வழங்கவும் – தியேட்டர் உணவு விலை உயர்வை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை அவசியம்! தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கொறடா மந்திரமூர்த்தி வலியுறுத்தல்!!

  • Share on

Trending News