தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதி, கூட்டுடன் காடு அய்யனார் காலனி சேர்ந்த வெயில்ராஜ் - நாராயண செல்வி தம்பதியினரின் மகன் உதய சிவாவும், கோவில்பட்டி பால்ராஜ் - செண்பகலட்சுமி தம்பதியினரின் மகள் செல்வ பாரதிவும் இணையும் திருமணம் நாளை (அக்டோபர் 31) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு புதுக்கோட்டை சத்யா மஹாலில் சிறப்பாக நடைபெறுகிறது.
இந்த இனிய மணவிழாவில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, தொழிலதிபர் முருகேசன் பாண்டியன், தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்கொடி, இளைஞர் அணி தெற்கு மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர் மணி, மாடசாமி, தூத்துக்குடி மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.
விழா ஏற்பாடுகளை வெயில்ராஜ் - நாராயண செல்வி தம்பதியினர், புதுமைராஜ் உள்ளிட்ட குடும்பத்தினர் ஆர்வமுடன் செய்து வருகின்றனர். தூத்துக்குடி திமுக குடும்பத்தினரை ஒன்றிணைக்கும் பாசம், நட்பு, உறவு கலந்து இந்நிகழ்ச்சி புதுக்கோட்டையில் இனிதே நடைபெற உள்ளது.