Breaking News

முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி – தூத்துக்குடியில் மதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்!!

  • Share on

தெய்வத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் அமைந்துள்ள தேவரின் சிலைக்கு அவரது ஜெயந்தி தினத்தையொட்டி அவரது தியாகத்தையும் தேசப்பற்றையும் போற்றும் விதமாக புகழ் வணக்கம் செலுத்தி மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக துணைச் செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி தலைமை தாங்கினார், மாநகர துணைச் செயலாளர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


  • Share on

பசும்பொன் தேவரின் தியாகம் நெஞ்சில் நிற்கும் – ஜெயந்தியில் வக்கீல் ரமேஷ் பாண்டியன் மரியாதை!!

முத்துராமலிங்க தேவர் 118வது ஜெயந்தி — தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை!!

  • Share on

Trending News