Breaking News

தேச நலனுக்காக ஜார்க்கண்ட் முதல் கன்னியாகுமரி வரை ஸ்கேட்டிங் பயணம் — அஜய் விஸ்வகர்மாவுக்கு இந்து முன்னணி சார்பில் உற்சாக வரவேற்பு!!

  • Share on

திருநெல்வேலி–தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், நாட்டின் ஒற்றுமையும் விவசாய வளர்ச்சியும், மக்கள் நலனும் செழிக்க வேண்டி தேசியக் கொடியுடன் ஜார்க்கண்ட் முதல் கன்னியாகுமரி வரை ஸ்கேட்டிங் பயணம் மேற்கொண்டு வரும் அஜய் விஸ்வகர்மா அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா தலைமையில் பயணிக்கும் வீரருக்கு குடிநீர் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இவ்விழாவில் இந்து முன்னணி நிர்வாகிகள் சிவலிங்கம், பேச்சியப்பன் சிவா, வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு, அஜய் விஸ்வகர்மாவின் தேசப்பற்று முயற்சியை பாராட்டினர்.

தேசம், விவசாயம் மற்றும் மக்கள் நலன் செழிக்க வேண்டி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அற்புதமான விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பயணம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


  • Share on

முதல்வர் ஸ்டாலின் வருகைக்கு தூத்துக்குடி போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் உற்சாக வரவேற்பு!!

கனரக வாகனத்தால் சேதமான குளத்தூர் – வீரபாண்டியபுரம் சாலை: தமிழக வெற்றிக் கழகம் புதிய சாலை அமைக்க கோரிக்கை!!

  • Share on

Trending News