Breaking News

தேசிய போட்டிக்குத் தேர்வான மாணவர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து!!

  • Share on

ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா (SGFI) சார்பாக செங்கல்பட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான தேர்வு போட்டியில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் செல்வன் சுஜய் பாலா தங்கப் பதக்கம் வென்று மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு பெற்றுள்ளார்.

அதேபோன்று, மும்பையில் ICSE பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்ட பிரிவில் செல்வி பிரேம வர்ஷிகா ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

இவர்கள் இருவரும் வரும் மாதம் குவாலியரில் நடைபெற உள்ள ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா (SGFI) தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றனர். இவ்வேளையில், மேயர் ஜெகன் பெரியசாமி, “இருவரும் தூத்துக்குடி மாநகருக்கு பெருமை சேர்த்துள்ளனர். எதிர்காலத்திலும் பல்வேறு போட்டிகளில் மாநில, தேசிய, சர்வதேச அளவிலும் வெற்றி பெற்று நகரின் கண்ணியத்தை உயர்த்த வாழ்த்துகிறேன்” என்றார்.

இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் லட்சுமணன், முகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.


  • Share on

மழை நெருங்கும் நேரம்... பணிகள் புயல் வேகத்தில்! – ஆய்வில் தீவிரம் காட்டிய மேயர் ஜெகன்!

தூத்துக்குடியில் நான்கு இடங்களில் புதிய மின்மாற்றிகள் – அமைச்சர் கீதாஜீவன் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்!

  • Share on

Trending News