Breaking News

தூத்துக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனார் 101வது பிறந்தநாள் விழா - சாதி ஒழிப்பு, சமத்துவம், தொழிலாளர் நலன் உறுதிமொழியுடன் கொண்டாட்டம்!!

  • Share on

தூத்துக்குடி, அக்டோபர் 10
சாதி ஒழிப்பு போராளி, சமூக நீதி காவலர், சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 101வது பிறந்தநாள் விழா, தமிழர் விடியல் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்கள் அனைத்து சமூக மக்களுக்காகவும் போராடியவர் என்றும், சமூக நீதி நிலைநாட்டும் போர்வீரர் என்றும் தமிழர் விடியல் கட்சி சார்பில் உரையாற்றப்பட்டது. பின்னர் பேசிய தோழமை கட்சிகளின் தலைவர்கள், “தியாகியின் கனவு சாதியற்ற சமூகம்” எனக் கூறி அவரை நினைவு கூர்ந்தனர். விழாவை ஒட்டி பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டது. வானவேடிக்கை வெடித்து கொண்டாடப்பட்டது. “சமத்துவம் நிலைநாட்டுவோம், சாதியற்ற சமூகம் உருவாக்குவோம்” என்ற உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர். விழா தலைமை சேமா. சந்தனராஜ் பாண்டியன் தமிழர் விடியல் கட்சி மாவட்ட பொறுப்பாளர் முன்னிலை
K. ரவி, ஆட்டோ ராஜபாண்டி, ஜான், கிருபா, ஜீவிதன், தமிழன் டேவிட் உள்ளிட்டோர் சிறப்பு வாழ்த்துச் செய்தி உரையாற்றியோர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன், வழக்கறிஞர் சார்லஸ், மாவட்ட துணைச் செயலாளர் மாரிமுத்து, புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா.மாரிச்செல்வம், காங்கிரஸ் கட்சி எஸ்சி/எஸ்டி பிரிவு தலைவர் A.D. பிரபாகரன், ஐ.என்.டி.யூ.சி. மாநில தொழிற்சங்க பொறுப்பாளர் அன்னை இந்திரா சுப்ரமணியன், தமிழர் முன்னேற்றக் கழக தலைவர்கள் அர்ஜுனன், ராஜா, தாயக மக்கள் கட்சி பொதுச் செயலாளர் எஸ்.ஆர். அகமது, மனிதநேய ஜனநாயக கட்சி செயலாளர் ஹசன், தமிழ் புலிகள் கட்சி தென்மண்டல செயலாளர் தாஸ், குயிலி பேரவை பொறுப்பாளர்கள் முனியம்மாள், நெல்லை தச்சை மாடத்தி, புரட்சிகர இளைஞர் முன்னணி செயலாளர் சுஜித், ஏஐசிசிடியூ தலைவர் மின்னல் அம்ஜித், இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், ஆதித்தமிழர் கட்சி தலைவர் கே.பி. ஜெயக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் காளீஸ்வரன்,
நீலம் பண்பாட்டு மையம் செயலாளர் நீலம் பிரதீப் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

தொழிலாளர் நலனுக்காக புதிய அமைப்பு விழாவில் உலகப் புரட்சியாளர் சேகுவாரா நினைவு தினமும், தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்த நாளும் ஒரே நாளில் வந்ததை முன்னிட்டு தொழிலாளர் நலனுக்காக “விடுதலை சிங்கங்கள் தொழிற்சங்கம்” என்ற புதிய அமைப்பு அறிவிக்கப்பட்டது.

இந்த அமைப்பு தூய்மை பணியாளர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களின் நலனுக்காகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. பொறுப்பாளர்கள் தலைவர் – சேமா. சந்தனராஜ் பாண்டியன் (தமிழர் விடியல் கட்சி மாவட்ட பொறுப்பாளர்) செயலாளர் – ஹசன் (மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர்) பொருளாளர் – தாஸ் (தமிழ் புலிகள் கட்சி தென்மண்டல செயலாளர்) “எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் எனது கால்கள் பயணிக்கும்” என்ற சேகுவாராவின் கருத்தை நினைவுகூர்ந்து, தமிழர் விடியல் கட்சி சமத்துவம் மற்றும் சமூக நீதி நிலைநாட்டும் உறுதிமொழியுடன் விழாவை நிறைவு செய்தது.


  • Share on

“நமக்கு நாமே திட்டத்தில் நூலகம் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!”

“மழைக்கு முன் மேயர் ஜெகன் அதிரடி ஆய்வு – குறிஞ்சி நகர் வடிகால் பணிகள் வேகமெடுக்கும்!”

  • Share on

Trending News