Breaking News

மழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் – ஓம் சாந்தி நகரில் மின் மோட்டார் அறை பணிகளை நேரில் பார்வையிட்ட தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!

  • Share on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஓம் சாந்தி நகரில் மழை நீர் தேங்காமல் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டார் அறை பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பணிகளின் முன்னேற்றம், மோட்டார்களின் செயல்திறன் மற்றும் நீர்நிலைகள் வழியாக நீர் வெளியேறும் நிலைமை ஆகியவற்றை மேயர் ஆராய்ந்தார். மழை காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.


  • Share on

“உயிர் காக்கும் வேகத்தடைகள் மீண்டும் வேண்டும்!” – புதுக்கோட்டை மக்களுக்காக கோசல்ராம் ராஜா குரல்!!

“நமக்கு நாமே திட்டத்தில் நூலகம் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!”

  • Share on

Trending News