கரூர் மாவட்டத்தில் நடிகர் விஜயின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவம் குறித்து, அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யாததற்கு கடும் கேள்வி எழுப்பியுள்ளார் சீட்டாவின் நிறுவனர் மற்றும் அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையத்தின் சேர்மேன் ப.பாபு @ லஞ்ச ஒழிப்பு பாபு.
அவர் தெரிவித்ததாவது:
அப்பாவி மக்களின் உயிரை காவுகொண்ட இந்த சம்பவம், திட்டமிட்ட முறையில் நிகழ்த்தப்பட்ட கொலை.
கூட்டத்திற்கு நெருக்கடியான இடத்தை திட்டமிட்டு ஒதுக்கி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறியும் கூட்டம் நடத்த அனுமதி அளித்தது அதிகாரிகளின் கடமையின்மை.
கூட்ட நெரிசலில் அதிக மக்கள் கூடுவதை முன்கூட்டியே அறிந்தும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.
மின்சாரத்தை துண்டித்து கலவரம் தூண்டி, பொதுமக்களை சிக்கவைத்து உயிரிழக்கச் செய்தது ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்று நாட்டின் கண்ணியத்தை குலைத்துள்ளது.
எனவே, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர், மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மின்சார வாரிய பொறியாளர்கள் உள்ளிட்டோர் அனைவரையும் குற்றவாளிகளாக அறிவித்து கைது செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.
மேலும், இந்த பரிந்துரையை மத்திய உள்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கும் அனுப்பியுள்ளதாகவும் பாபு தெரிவித்துள்ளார்.