Breaking News

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் புதிய வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக ஆய்வு!!

  • Share on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக ஆய்வு செய்தார். ஆய்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, துணை மேயர் ஜெனிட்டா, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மண்டல தலைவர் பாலகுருசாமி, பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் விஜயகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.

அய்யன் கோயில் தெரு, முஸ்லிம் தெரு மற்றும் தோப்புத் தெரு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வடிகால் பணிகள், மழைகாலத்திற்கு முன்னர் நிறைவடைந்து, மண்ணழிவுகள் மற்றும் வெள்ள அபாயங்களை குறைக்கும் வகையில் அமைக்கப்படும் என்று மாநகராட்சி தகவலில் தெரிவித்துள்ளது.

மேயர் ஜெகன் பெரியசாமி, பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கான வசதிகளை கருத்தில் கொண்டு பணிகள் விரைவாக மற்றும் தரமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை எடுத்தார்.


  • Share on

எம்.சி. சண்முகையா எம்எல்ஏ திறந்துவைத்த அய்யப்பபுரம் புதிய ரேஷன் கடை – மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!

தூத்துக்குடியில் பிரதான சந்திப்புகளில் புதிய மின் விளக்குகள்: மேயர் ஜெகன் பெரியசாமி நேரடி ஆய்வு!!

  • Share on

Trending News