பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் இந்தியர் கட்சி சார்பில் அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சி மாநில பொருளாளர் பேரூரணி து. ஜெயகணேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் சங்கரன், வடக்கு மாவட்டச் செயலாளர் கருப்பசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் ஜேசு ராஜேந்திரன், மாநில தொழிற்சங்கத் தலைவர் சரவணகுமார், மாநில தொழில்நுட்ப அணி செயலாளர் சுந்தர், திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் வேல்சாமி, நல்லாசிரியர் பன்னீர்செல்வம், பாலமுருகன், எட்பின், ராஜன், தங்கதுரை, திருமணி செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அன்னாரின் சமூகப்பணி, கல்வி, பத்திரிகைத்துறை மற்றும் விளையாட்டு துறைகளுக்கான அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து அனைவரும் மரியாதை செலுத்தினர்.