தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கத்தின் டிரஸ்ட் சார்பில், ஆயுள் சந்தா உறுப்பினர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து மையவாடியில் தேங்கியிருந்த முட்செடிகள் மற்றும் குப்பைகள் அகற்றும் சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது.
இந்த பணிக்கான சிறப்பான ஏற்பாடுகளை மேனேஜிங் டிரஸ்டி திரு. விவேகானந்தன் அவர்கள் மேற்கொண்டதுடன், சங்க செயலாளர் மற்றும் டிரஸ்ட் உறுப்பினர் திரு. ஆர். ரெங்கசாமி, இணை மேனேஜிங் டிரஸ்டி திரு. அ. மோஹன் ஆகியோரும் நேரில் மையவாடியை பார்வையிட்டனர்.
மையவாடி சுத்தப்படுத்தும் இந்த நடவடிக்கை, சமூக நலனைக் கருத்தில் கொண்டு டிரஸ்ட் மேற்கொண்ட முக்கிய முயற்சியாகக் காணப்படுகிறது.