Breaking News

அய்யனடைப்பு கோரம்பள்ளம் பிரத்தியங்கிராதேவி பீடத்தில் புரட்டாசி 5-ஞாயிறு அமாவாசை சிறப்பு அபிஷேகமும் மகாயாகமும்!!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் அய்யனடைப்பு, கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி – கால பைரவர் சித்தர் பீடத்தில், புரட்டாசி மாதம் 5-வது ஞாயிறு, அமாவாசை தினமான செப்டம்பர் 21, 2025 அன்று மதியம் 12.30 மணிக்கு சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம், குங்குமம், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் மகாயாகத்துடன் சிறப்பாக நடைபெற்றன.

அம்மனை வணங்கினால் திருமணத் தடை நீங்கும், புத்ரபாக்கியம் கிட்டும், மன நிம்மதி கிடைக்கும், செல்வ வளம் பெருகும், தீராத நோய்கள் குணமாகும், கடன் தொல்லைகள் நீங்கும், அரசியலில் மேன்மை பெறலாம், முன்னோர்களின் சாபம் நீங்கி தகுதிக்கு ஏற்ப வேலை கிடைக்கும், முன் ஜென்ம பாவங்கள் நீங்கி குடும்பத்தில் ஆனந்தம் பொங்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

பின்னர் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற்றனர்.

இந்த ஆன்மிக நிகழ்வை சாக்த ஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தரும், ஸ்ரீ கால பைரவர் சித்தர் பீட அறக்கட்டளை பிரத்தியங்கிராதேவி பீடம், அய்யனடைப்பு – கோரம்பள்ளம் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


  • Share on

உடன்குடியில் திமுக மாபெரும் பொதுக்கூட்டம் : “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்” என உறுதிமொழி!!

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் கோலாகலம்!!

  • Share on

Trending News