Breaking News

பால்பாண்டி நகர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!

  • Share on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பால்பாண்டி நகர் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார் ஆகியோரும், மற்றும் கழக நிர்வாகிகளும் இணைந்து கலந்து கொண்டனர்.

பணிகள் தாமதமின்றி தரமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக அதிகாரிகளுக்கு மேயர் அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்கள் வசதிக்காக சீரான வடிகால் வசதி மிக அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

 இந்த ஆய்வு பொதுமக்கள் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு மாநகராட்சி மேற்கொள்ளும் பணிகளுக்கு ஊக்கமளிக்கிறது என பார்வையாளர்கள் தெரிவித்தனர்.


  • Share on

“தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” – ஓரணியில் தமிழ்நாடு திமுக பொதுக்கூட்டத்தில் உறுதிமொழி!!

ஜிஎஸ்டி குறைப்பு தேர்தல் அரசியல் நாடகம் – மத்திய அரசை கடுமையாக தாக்கிய அமைச்சர் கீதாஜீவன்!!

  • Share on

Trending News