Breaking News

ஓரணியில் தமிழ்நாடு திமுக பொதுக்கூட்டம் – அமைச்சர் கீதா ஜீவன் மேடையேறி மக்கள் மனம் கவர்ந்த நிகழ்வு!!

  • Share on

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில், ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகில் இன்று மாலை நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம், மக்கள் திரளால் பேரதிர்வை ஏற்படுத்தியது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள் தலைமை தாங்கி வருகிறார்.

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் வகித்து வருகின்றனர்.

தலைமை கழக பேச்சாளர்களான கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி மற்றும் சரவெடி சரத் பாலா சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தீவிரமான உரைகளால் கூட்டத்தை கவர்ந்தனர். இதில், “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற தலைப்பில் ஆண்டாள் பிரியதர்ஷினி உரையாற்றியதோடு, தொடர்ந்து சரவெடி சரத் பாலா தனது உரையால் உற்சாகக் குரல்களை கிளப்பி வருகிறார்.

மாவட்டம் முழுவதும் இருந்து திரளாகக் கூடிய திமுக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், முழக்கங்களால் நிகழ்வை அதிர வைத்தனர்.

அத்துடன், திமுக ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பிரசாரத்தில் சிறப்பாகச் செயல்பட்ட பாக முகவர்களை அமைச்சர் கீதா ஜீவன் கௌரவித்து பாராட்டினார்.

மக்கள் பெருந்திரளால் களைகட்டிய இந்த பொதுக்கூட்டம், ஓரணியில் திமுகவின் வலிமையை வெளிப்படுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.



  • Share on

தூத்துக்குடி கடற்கரைகளில் மாபெரும் சுத்தம் – பசுமை இயக்கங்களை துவக்கி வைத்தார் மேயர் ஜெகன் பெரியசாமி!!

“தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” – ஓரணியில் தமிழ்நாடு திமுக பொதுக்கூட்டத்தில் உறுதிமொழி!!

  • Share on

Trending News