லண்டன் வட்டமேசை நாயகன், பழந்தமிழர் திவான் பகதூர் ஐயா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 180வது நினைவு நாளை முன்னிட்டு, இன்று (18.09.2025) அவரது சிலைக்கு தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை மற்றும் ஆதித்தமிழர் புரட்சி கழகம் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில், கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் புலி. செ. இளவரச பாண்டியன் அவர்கள் தலைமையில் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
சமூக நீதிக்கும், சமத்துவத்துக்கும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த மகத்தான சமூக சீர்திருத்தவீரரை நினைவு கூர்ந்த அனைவரும், அவரது கொள்கைகளைப் பின்பற்றி சமூக ஒற்றுமைக்காக பணியாற்றுவோம் என உறுதியெடுத்தனர்.