தூத்துக்குடி, செப்.17 பகுத்தறிவு பகலவன், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் மற்றும் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தங்கத்தளபதியார் அவர்கள் வழங்கிய ஆணைக்கிணங்க, கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. எண். ஆனந்த் (Ex.MLA) அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தூத்துக்குடி மத்திய மாவட்டத்தில் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் திருமதி A. அஜிதா ஆக்னல் M.Sc., B.Ed., அவர்கள் தலைமையில் கழகத் தோழர்கள் மற்றும் தோழிகள் கலந்து கொண்டு, தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விழாவை முன்னிட்டு உரையாற்றிய அஜிதா ஆக்னல் அவர்கள், “பெரியார் அவர்கள் காட்டிய பகுத்தறிவு, சமூக நீதி, சமத்துவம் போன்ற கொள்கைகள் இன்றும் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சக்தியாக உள்ளன. சமூகத்தில் ஒவ்வொருவரும் சமத்துவத்துடன் வாழும் சூழலை உருவாக்குவதே எங்கள் கழகத்தின் நோக்கம்” என வலியுறுத்தினார்.
மேலும், பெரியார் சிந்தனைகள் நாளும் பரவி, ஒடுக்குமுறையற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்ற உறுதியுடன் அனைவரும் செயல்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது.