Breaking News

கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவை சாதனை விழாவாக மாற்றுவதற்கு அதிக அளவில் பங்குபெற வேண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!!

  • Share on

தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் அவைத்தலைவர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது.
     
தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் தமிழக முதலமைச்சர் தளபதியாா் உத்தரவிற்கிணங்க இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

அண்ணா பிறந்தநாளை யொட்டி 3 தொகுதிகளிலும் உள்ள வாக்குசாவடி முகவா்கள் கூட்டத்தில் "தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம்" என்ற உறுதிமொழியை அனைவரும் எடுக்க வேண்டும். பிஜேபி அரசு நமக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து வருகிறது அவா்களோடு எடப்பாடியும் தற்போது விஜயயும் நம்மை எதிர்த்து கொண்டு செயல்படுகிறாா்கள். அது ஓரு நாளும் ஈடேறாத திட்டமாகத்தான் இருக்கும் தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் தினந்தோறும் திட்டமிட்டு பணியாற்றுகிறாா்.

மக்கள் நம்பக்கம் தான் இருக்கிறாா்கள் தமிழகத்தில் எங்கேயாவது ஒரு இடத்தில் சமுதாய மக்கள் பணி விஜய் செய்ததுண்டா, அன்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தோ்தலில் 242 இடங்களில் பிஜேபி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி கூடுதலாக 40 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கும் தமிழகத்திற்கான அனைத்து திட்டங்களும் நிதி ஓதுக்கீடுகளும் முழுமையாக கிடைத்திருக்கும் எந்த தடை பிஜேபி அரசு போட்டாளும் அதை யெல்லாம் உடைத்து 2026 தோ்தலில் மீண்டும் முதலமைச்சராக ஸ்டாலின் அாியனையில் அமருவாா். அதற்கு அனைவரும் சபதம் ஏற்று பணியாற்ற வேண்டும். என்றுபேசினாா்.
    
கூட்டத்தில் சண்முகையா எம்.எல்.ஏ, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர் ஜெஸி பொன்ராணி, மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயக்குமாா் ரூபன், ஆறுமுக பெருமாள், பொருளாளர் ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, பொதுக்குழு உறுப்பினர்கள் சொா்ணகுமாா், முத்துச் செல்வன், இந்திராகாசி, சாகுல்ஹமீது, ஆறுமுக பாண்டியன், ராஜலட்சுமி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் ராமஜெயம், சுரேஷ், வீரபாகு, செல்வபெருமாள், செல்வகுமாா், ரகுராமன், சாரதா பொன்இசக்கி, தயாநிதி பாண்டியன், ராமசாமி, ரெங்கநாதன் என்ற சுகு போின்ப ராஜ் லாசரஸ், ரவி என்ற பொண்பாண்டி, ஆனந்த், சுரேஷ்குமாா், அணி துணை அமைப்பாளர்கள் ஸ்டாலின், அந்தோணி தனுஷ்பாலன், ஓன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, புதூர் சுப்பிரமணியன், இளையராஜா, சரவணக்குமாா், ராமசாமி, சுரேஷ்காந்தி, கொம்பையா, இளங்கோ, ரவி, ஜோசப், பாா்த்திபன், கோட்டாளம், கொம்பையா, சதீஸ், பாலசிங், ரமேஷ், பகுதி செயலாளா்கள் சிவக்குமாா், ஆஸ்கா், பேரூா் செயலாளா்கள் இளங்கோ, ராயப்பன், சுப்புராஜ், நவநீத முத்துக்குமாா், கண்ணன், கோபிநாத், ராமஜெயம், முத்துவீரபெருமாள், ஜமீன்சாலமோன், மால்ராஜேஷ், முருகானந்தம், நவநீதபாண்டியன்,  மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, மாவட்ட பிரதிநிதி பூபேஸ்நாதன், ஓன்றிய துணைச் செயலாளர்கள் நாராயணன், ஹாிபாலகிருஷ்ணன், சண்முகராஜ், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் பொன்னரசு, மற்றும் கபடி கந்தன், வக்கீல் கிருபாகரன்,  பாரதிராஜா, கப்பிகுளம் பாபு, உள்பட பல்வேறு அணியை சோ்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட துணைச்செயலாளர் ஜெபத்தங்கம் பிரேமா நன்றியுரையாற்றினாா்.


  • Share on

தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதியில் நாளை 300 இடங்களில் பகுதி சபா கூட்டம் நடைபெறுகிறது மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!!

நடிகா் விஜய் கட்சியில் கட்டுப்பாடு, கண்ணியம் இல்லை தலைமை கட்டுப்பாட்டோடு கூட்டத்தை நடத்த வேண்டும் விரைவில் கற்று கொள்வார் தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பரபரப்பு பேட்டி!!

  • Share on

Trending News