Breaking News

தூத்துக்குடியில் நீர் சாகச விளையாட்டுக்கள் திருவிழா - மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்!!

  • Share on

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி, தமிழ்நாட்டில் கடற்கரை சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக, இளைஞர்கள் மத்தியில் நீர் சாகச் விளையாட்டுகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, அதன் தொடக்கமாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக "நீர் சாகச விளையாட்டுகள் திருவிழா' தூத்துக்குடியிலுள்ள முத்துநகர் கடற்கரையில் நடைபெற்றது. இந்த திருவிழாவானது இன்று (12-09-2025) தொடங்கி,(14-09-2025) அன்று வரை மூன்று நாள்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

இத்திருவிழாவில் Kayaking, Surfing, Stand-up paddle (SUP), Giant Kite Demo, Boat Race, Beach Volleyball, Wild Warrier Race o Beach Swimming Competition ஆகிய போட்டிகள் மற்றும் விளையாட்டுகள் மூன்று நாள்களும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்களால் நடைபெறவுள்ளது. சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு, கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்போட்டிகளில், கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளும் வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தூத்துக்குடி சுற்றுலா அலுவலர் இரா. சீதாராமன் வரவேற்புரை நிகழ்த்தினார். தூத்துக்குடி AQUA SPORTS நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


  • Share on

தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் திட்டம் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாநகராட்சி லயன்ஸ் டவுண் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி - மேயர் ஆய்வு!!

  • Share on

Trending News