ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து அரசு ஆலையை மூடியுள்ள நிலையில் ஆலைக்கு எதிரான பேராட்டத்தில் 15 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில் இன்று நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் விவிடி சிக்னல் அருகே வழக்கறிஞர்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியது பொதுமக்களிடையே வன்முறையை தூண்டும் விதமாக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் உள்ளது எனவே காவல்துறை சட்டபடி நடவடிக்கை எடுப்பதோடு தமிழ்நாடு பார்கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கபடும் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அருணாதேவி ரமேஷ்பாண்டியன் மக்கள் நல உரிமை அமைப்பாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.