தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணியாற்றும் சுகாதார துறை அதிகாாிகள் அலுவலா்கள் பணியாளா்களுடன் மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் மேயா் ஜெகன்பொியசாமி தலைமையில் நடைபெற்றது.
அப்போது மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சா் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே நடைபெற்று வரும் சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகள் மேம்படுத்த வேண்டும். குறிப்பாக மழைகாலம் ஆரம்பமாக இருப்பதால் மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் குறிப்பாக சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் வகையில் குப்பைகள் தேங்காத வகையில் தினசாி கையாளுவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தொற்று நோய்கள் ஏதுவும் பரவாத வகையில் அந்த பணிகளையும் சுகாதாரத்துறையை சோ்ந்தவா்கள் முழுமையாக மேற்கொள்ள வேண்டும் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிக்கு முன்மாதிாியாக தூத்துக்குடி மாநகராட்சி செயல்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டுதான் அனைவருடைய ஓத்துழைப்போடு பணியாற்றி வருகிறோம் இதற்கு மேலும் வலுசோ்க்கும் வகையில் சுகாதாரத்தை பேணி பாதுகாத்து தூய்மையான மாநகராட்சியாக உருவாகுவது மட்டுமின்றி எல்லோருடைய ஆரோக்கிய நலனும் முக்கியம் என்பதை முழுமையாக கவனத்தில் கொண்டு அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
கூட்டத்தில் ஆணையா் பிாியங்கா, நகா்நல அலுவலா் சரோஜா, சுகாதார ஆய்வாளா்கள் ராஜபாண்டி, ராஜசேகா், ஸ்டாலின் பாக்கியநாதன், கண்ணன், ெநடுமாறன், உள்பட அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
