Breaking News

அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழாவில் குழந்தைகளை குத்துவிளக்கு ஏற்ற சொல்லி அழகுபார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது!!

  • Share on

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் புதியம்புத்தூர் ஊராட்சியில் 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு அங்கன்வாடி மைய கட்டிடங்களை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திலகா வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர் உதவி பொறியாளர் செல்வபாக்கியம் ஊராட்சி செயலாளர் உத்திரகனி தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி ஒன்றிய துணை செயலாளர் சிவன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன் வர்த்தகர் அணி முத்துக்குமார் இளைஞரணி தங்கதுரை பாண்டியன் சிறுபான்மை அணி ஞானதுரை நெசவாளர் அணி ஈசன் சுரேஷ் தங்கராஜ் செல்வம் ஆதிதிராவிடர் அணி மாடசாமி கருப்பசாமி மகளிர் அணி ஜெயா கிளைச் செயலாளர்கள் பூவலிங்கம் சற்குண பாண்டியன் பால. குருசாமி டேவிட் ஞானசேகர் மாரியப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அங்கன்வாடி மைய கட்டிடங்களை திறந்து வைப்பதற்காக வருகை தந்த சண்முகையா எம்எல்ஏ 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு அங்கன்வாடி மைய கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றும் போது அங்கன்வாடி குழந்தைகளை ஏற்ற சொல்லி அழகு பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தனக்கான உரிமையை விட்டுக்கொடுக்காத இந்த கலியுகத்தில் தனக்கு கொடுத்த மரியாதையை குழந்தைகளுக்கு வழங்கி அழகு பார்த்த சம்பவமானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியும் ஒரு எம்எல்ஏவா என்று பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

 


  • Share on

புதியம்புத்தூர் ஊராட்சியில் 28 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு அங்கன்வாடி மைய கட்டிடங்களை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்!!

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை சண்முகையா எம்எல்ஏ ஆய்வு!!

  • Share on

Trending News