தூத்துக்குடி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நிறைகுளத்து அய்யனார் திருக்கோவில், ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவானது நிகழும் மங்களகரமான 1201ம்ளு விசுவாவஸூ வருடம் ஆவணி 19மீ (04.09.2025) வியாழக்கிழமை உத்திராட நட்சத்திரமும், த்வாதசியும், சித்த யோகமும் கூடிய சுபயோக சுபதனத்தில் இன்று காலை (9 மணிக்கு மேல் 10 மணிக்குள்) துலா லக்னத்தில் விமான கோபுரம் மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு "மகா கும்பாபிஷேகம்" சிவஸ்ரீ ரா. செல்வம் பட்டர் (எ) கல்யாண சுந்தர சிவாச்சாரியார் தூத்துக்குடி, ஆலய நிர்மான ஸ்தபதி ஆர்.ஆர். பாலகிருஷ்ணன் ஸ்தபதி & சன்ஸ் ஸ்ரீ கோமாதா சிற்பக் கலை கன்ஸ்ட்ரக்ஷன் ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .
நிகழ்ச்சியில் பக்த மெய்யன்பர்களும், ஆன்மீக செல்வர்களும் வருகை தந்து இம்மையிலும், மறுமையிலும் எல்லா வளமும் நலமும் அருளும் பெற்றனர். அதைத்தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
(02.09.2025) செவ்வாய் கிழமை தொடங்கி (03.09.2025) புதன் கிழமையான நேற்று வரை இரண்டு தினங்கள் ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ஸ்ரீ நவக்ரஹ ஹோமம், ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம், மற்றும் முதற்கால யாகசாலை பூஜை, அதைத்தொடர்ந்து தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும், புதன் கிழமையான நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜை மூன்றாம் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் கும்பாபிஷேக விழா குழுவினர்கள், காட்டு நாயக்கன்பட்டி வடக்கு தெரு, தெற்கு தெரு ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
