Breaking News

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கோரம்பள்ளம் ஊராட்சியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை சண்முகையா எம்எல்ஏ ஆய்வு!!

  • Share on

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கோரம்பள்ளம் ஊராட்சி கிராம
மக்களுக்கான "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு திட்ட முகாம் இன்று கோரம்பள்ளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.



ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முகாமில் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மற்றும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் மனு வழங்கிய மனுதாரர்களுக்கு மின்சார வாரியம் மற்றும் பொது விநியோக திட்ட பெயர் திருத்தம் ஆகிய ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஐகோர்ட் மகாராஜா பானு வருவாய் ஆய்வாளர் செல்வலட்சுமி தொகுதி தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் சின்னதுரை மாவட்ட மகளிர் சமூக வலைதள பொறுப்பாளர் மீனாட்சி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சண்முகநாராயணன் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் மணிகண்டன் தலைமைக் கழக பேச்சாளர் பொன்னரசு கிளை செயலாளர் கோபால் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


  • Share on

அய்யா வைகுண்டரை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாள் மூலம் இழிவுபடுத்திய அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் கோரிக்கை!!

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் - மேயர் தலைமையில் நடைபெற்றது!!

  • Share on

Trending News