தூத்துக்குடி மாநகராட்சி 40வது வார்டுக்குட்பட்ட பனிமய மாதா பேராலயத்திற்கு பின்புறம் உள்ள தஸ்நேவிஸ் பள்ளிக்கு அருகே கழிவு நீர் கால்வாய் கட்டமைப்பு பணி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு கால்வாய் அமைக்கும் பணியை நல்ல முறையில் முடிக்க வேண்டும் என்று அதிகாாிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.
ஆய்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மீனவரணி துணைச் செயலாளர் சேசையா, வட்டச் செயலாளர் டென்சிங், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மகளிா் அணி கமலி, வட்டப்பிரதிநிதி பாஸ்கா் மற்றும் மணி அல்பட் உள்பட பலா் உடனிருந்னா்.