தூத்துக்குடி மறை மாவட்டம் தாளமுத்து நகர் பங்கில் அமைந்துள்ள புனித பிலோமினம்மாள் ஆலயத்தின் (31.08.2025) ஞாயிறு இரவு மூன்றாம் நாள் திருவிழாவில் இராஜபாளையம் ஊர் மக்களுக்கான சமையல் போட்டி இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் இளைஞர் இயக்கத்தினர் சார்பில் நடைபெற்றது.

ஒரு குழுவிற்கு 5 பேர் மொத்தம் 23 குழு போட்டியில் கலந்து கொண்டனர். ஊர் நிர்வாகிகள் நடுவர்களாக செயல்பட்டு முதல் மூன்று இடங்களை தேர்வு செய்வதில் தினறி விட்டார்கள் ஆம் போட்டி என்னவென்றால் நெய் சோறு கோழிகறி கிரேவி மற்றும் ஒரு இனிப்பு தயார் செய்ய வேண்டும் என்பது போட்டியாளர்களுக்கு அரிசியும் கோழி கறியும் இளைஞர் அமைப்பினர் கொடுத்தனர். மற்ற பொருட்கள் அனைத்தும் போட்டியாளர்களே கொண்டு வந்து கலந்து கொண்டு சமைத்து அசத்தி விட்டனர். 
ஒரு குழுவில் அனைவரும் இளைஞர்கள் இருந்து சமையல் போட்டியில் கலந்து கொண்டு சிறப்புத்தனர். நிறைவாக வெற்றியாளர்கள் பெயரை அறிவிக்கும் பொழுது இரவு 1 மணிக்கு மேல் ஆகி விட்டது. அது வரையில் மக்கள் பொறுமையாக இருந்தனர். 3 வது ஆண்டாக சமையல் போட்டி நடத்துகிறார்கள் இளைஞர் இயக்த்தினர்.

