என் செல்ல மகளே உனது பிறந்த நாளில் உனக்கு என் அன்பான வாழ்த்துக்கள்!
எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும்!!
உனது எல்லா கனவுகளும் நிறைவேற வேண்டும்!!
உனது புன்னகை என்றும் நிலைத்திருக்க வேண்டும்!!
நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்!!
அன்பே, நீ என் விழியின் ஒளி,
உன் பிறந்தநாளில் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்!!
என் வாழ்வின் அர்த்தம் நீயே,
உன் சிரிப்பில் என் மனம் திளைத்தழியுமே!!
ஆனந்த யாழை மீட்டுகிறாய்…
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்…
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்…
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்…
இரு நெஞ்சம் இணைந்து பேசிட…
உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை…
சிறு புல்லில் உறங்கும் பனியில்…
தெரியும் மழையின் அழகோ தாங்கவில்லை…
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி…
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி…
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே…
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி…
தூரத்து மரங்கள் பார்க்குதடி…
தேவதை இவளா கேக்குதடி…
தன்னிலை மறந்தா பூக்குதடி…
காற்றினில் வாசம் தூக்குதடி.....
அடி கோவில் எதற்கு…
தெய்வங்கள் எதற்கு…
உனது புன்னகை போதுமடி…
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே…
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி…
உன் முகம் பார்த்தால் தோணுதடி…
வானத்து நிலவு சின்னதடி…
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி…
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி…
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து…
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி…
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே…
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி…
என்று சகா கலைக்குழு நிறுவனர் முனைவர் மா. சகா சங்கர் தனது மகளின் பிறந்தநாளை சகா கலைக்குழு கலைஞர்களோடு கொண்டாடி மகிழ்ந்து வலைதள பக்கங்களில் மகளுடன் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய புகைபடத்தை பதிவிறக்கம் செய்து தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.