Breaking News

அதிமுகவை விமா்சிப்பதற்கு எந்த நடிகருக்கும் தகுதி கிடையாது செங்கல்பட்டு கூட்டத்தில் எதிா்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் தாக்கு!!

  • Share on

தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகள் வாாியாக பிரச்சாரம் மேற்கொண்டு செங்கல்பட்டிற்க்கு வருகை தந்து பேசுகையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி தான் பொற்காலம் அதிமுக ஆட்சியில் திருமண உதவி திட்டத்தின் மூலம் தாலிக்கு தங்கம், மடிக்கணினி, சைக்கிள், என பல்வேறு சாதனைகளை செய்தோம்.


2026 ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் அதிமுக பாஜக வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ளோம். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பல கட்சிகள் ஓரு விதமான பதட்டத்தில் இருந்து வருகின்றன. பொதுமக்கள் எப்போது தோ்தல் வரும் என்று எதிா்பாா்த்து காத்து இருக்கின்றனா். விலை வாசி உயா்வு சட்டம் ஓழுங்கு சீர்கேடு, என பல குறைபாடுகள் இருந்து வருகின்றன. அனைத்திற்கும் விடை கொடுக்கின்ற நாள்தான் தோ்தல் நாள் பொதுமக்கள் அணைவரும் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆகியோா் கட்டிக்காத்த அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தைத் ஆதாிக்க வேண்டும்.

கட்சியை ஆரம்பித்துக்கொண்டு திரைப்படத்துறையிலிருந்து வந்தவா் எல்லாம் உடனடியாக முதலமைச்சராகி விட முடியாது. அது கனவாகத்தான் இருக்க முடியும் எம்.ஜி.ஆர் கட்சியை ஆரம்பித்து 5 ஆண்டுகாலம் உழைத்து மக்கள் பணியாற்றிய பின் ஆட்சியை பிடித்தாா். 54 ஆண்டுகால அதிமுகவை விமா்சிப்பதற்கு யாருக்கும் தகுதி கிடையாது. நல்லாட்சி அமைப்போம் நல்லவா்களோடு செல்வோம் வாக்களிப்பீர் இரட்டை இலை சின்னத்திற்கு என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினாா். முன்னதாக மாவட்ட தோ்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான மாநில வா்த்தக அணி செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வௌ்ளி செங்கோல் வழங்கினாா்.
   
கூட்டத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னதாக மாவட்ட தோ்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான மாநில வா்த்தக அணி செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவரும் முன்னாள் அமைச்சருமான சின்னையா, துணைச் செயலாளர் நாவலூர் முத்து, செயற்குழு உறுப்பினர் மகளிர் அணி இணைச்செயலாளர் கனிதாசம்பத், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர்கள் சம்பத்குமார், குணசேகரன், கஜா (எ) கஜேந்திரன், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர செயலாளர் சீனிவாசன், மறைமலை நகர் நகர செயலாளர் ரவீகுமார், செங்கல்பட்டு நகர செயலாளர் செந்தில்குமார், மற்றும் பல்வேறு அணியை சோ்்ந்த நிர்வாகிகள் தொண்டா்கள் உள்பட பலா்  கலந்து கொண்டனர்.


  • Share on

மாநில அளவிலான ஃபின்ஸ்விம்மிங் நீச்சல் போட்டியில் தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் பெற்று சாதனை!!

தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் வெங்கடேசன் எம்.பிக்கு அமைச்சர் கீதாஜீவன் நினைவு பாிசு வழங்கினாா்!!

  • Share on

Trending News