Breaking News

காட்டுப்பகுதி மற்றும் ரயில்வே பாலம் குகை என மூன்று கிலோமீட்டர் வரை நடந்தே சென்று பார்வையிட்டு புதிய சாலை அமைக்க மேயா் ஜெகன் பொியசாமி உத்தரவு!!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதுபோல வாகனங்களின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் தினசரி அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டாலும் வாகனங்கள் செல்வதற்கான வசதிகள் தொடர்ந்து செய்து தர வேண்டும். அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோாிக்கையும் வந்து கொண்டே இருக்கிறது அதை பூர்த்தி செய்யும் வகையில் மாநகராட்சி நிா்வாகமும், செய்து வருகின்றன.
    
இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்த முதியோர்களிடம் சாலைகள் தொடர்பாக கடந்த சில நாட்களாக விபரங்களை கேட்டறிந்த நிலையில் மேயர் ஜெகன் பொியசாமி மீளவிட்டான் பகுதிக்கு வருகை தந்தார். அதன் பிறகு மீளவிட்டானிலிருந்து தெற்கு நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென்று காரை நிறுத்தி காட்டுப்பகுதிக்குள் நடந்து சென்றார். அந்த ஊரைச் சேர்ந்த பெரியவர்களிடம் சாலை எப்படி அமைப்பது என்ற விபரங்களை கேட்டு அறிந்தார். சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் காட்டுப்பகுதிக்குள் நடந்தே சென்று சாலை அமைப்பதற்கான பணிகளை பார்வையிட்ட அவர் ரயில்வே பாலம் மற்றும் குகைக்குள் சென்று பார்வையிட்டார். சுமார் இரண்டு மணி நேரம் நடந்து சென்று காட்டுப்பகுதிக்குள் சாலை அமைப்பதை கண்டுபிடித்தார்.

கதிர்வேல் நகர் கடைசி பகுதியிலிருந்து மீளவிட்டான் செல்வதற்கும், அதுபோல கதிர்வேல் நகரிலிருந்து மீள விட்டான் பகுதி வழியாக மடத்தூர் செல்வதற்கான சாலையையும் கண்டுபிடித்தார். உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து இந்த பகுதியில் இரு புறமும் உள்ள உடை மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். சாலை அமைப்பதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வாகனங்களில் வரும்  மக்கள் நகர் பகுதிக்குள் வராமல் புறநகர் பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்வதற்கான வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி அதிரடியாக உத்தரவிட்டார்.
   
அங்கு சாலை அமைக்கப்பட்டால் எப்படி அமைப்பது என்ற விபரங்களையும் ஊர் பொதுமக்களிடமும் மாநகராட்சி அதிகாரிகளிடமும் கேட்டறிந்தார். ஆரம்ப காலத்தில் மாட்டுவண்டி சாலையாக இருந்துள்ளது. மங்கம்மா சாலையாகவும் இருந்துள்ளது. ஆனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தட்டு தடுமாறி அந்த சாலையை பயன்படுத்தி தான் வருகிறோம் மீளவிட்டான் மக்களின் கோரிக்கையை ஏற்று கதிர்வேல் நகரில் இருந்து மீள விட்டானுக்கும், மீள விட்டானிலிருந்து மடத்தூருக்கும் சென்றுவிடலாம். மதுரை செல்லும் வாகனங்கள் பைபாஸ் வழியாக செல்வதற்கான வாய்ப்பை 40 வருடங்களுக்குப் பின்பு மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி 3 கிலோமீட்டர் 2 மணி நேரம் காட்டுப்பகுதிக்குள் நடந்தே சென்று கண்டுபிடித்து தூத்துக்குடி மக்களின்  போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நகர் பகுதிக்குள் வாகனங்கள் வராமல் புறநகர் பகுதி வழியாக பைபாஸ் சாலை செல்வதற்கு அதிரடியாக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

மேலும் அதன் அருகிலேயே சிப்காட் நிறுவனம் சாலை அமைத்து கேட் போட்டு மூடி வைத்துள்ளது. அந்த சாலையை உடனடியாக திறப்பதற்கு சிப்காட் நிர்வாகத்திடம் பேசி மக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வரப்படும் என்று பொதுமக்களிடம் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி உறுதியளித்தார். இனி வாகன ஓட்டுநர்கள் எந்தவித சிரமமும் இன்றி கதிர்வேல் நகர் பகுதியில் இருந்து மடத்தூர் பைபாஸ் சாலைக்கு இந்த சாலையை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சாலை உடனடியாக அமைக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து மீளவிட்டான் பொதுமக்கள் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமியை பாராட்டினார்கள்.

மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, வட்டச்செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா், உள்பட அரசுத்துறை அலுவலா்கள் பொதுமக்கள் உடனிருந்தனா்.


  • Share on

தூத்துக்குடியில் புகைப்பட அரங்கம் கனிமொழி எம்.பி திறந்து வைத்தாா்!!

மாநில அளவிலான ஃபின்ஸ்விம்மிங் நீச்சல் போட்டியில் தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் பெற்று சாதனை!!

  • Share on

Trending News