தூத்துக்குடி உமரிக்கோட்டையை சேர்ந்த கணவன் மனைவி இந்து முன்னணி இயக்க கட்டுப்பாட்டை மீறி சென்றதினால் இந்து முன்னணி பொறுப்பில் இருந்தும், இந்து அன்னையர் முன்னணியின் இருந்தும் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் இந்து முன்னணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

உமரிக்காட்டை சேர்ந்த A. பிரபாகர் இந்து முன்னணி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தார். இவர் இயக்க கட்டுப்பாடை மீறி சென்றதினால் இந்து முன்னணி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அதோடு இவரது மனைவி P. மகேஸ்வரியும் இந்து அன்னையர் முன்னணி பொறுப்பில் இருந்தார். இவர் வகித்து வந்த இந்து அன்னையர் முன்னணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவர்கள் சமீப காலமாக இந்து முன்னணியின் பெயரை பயன்படுத்தி பயனடைகிறார்கள் என்ற செய்தி வந்தது.
இவர்களுக்கும் இந்து முன்னணிக்கும், இந்து அன்னையர் முன்னணிக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் தனது பத்திரிகை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.