தூத்துக்குடியில் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு மாநாடு துவக்க விழா இன்று காலை தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. மாநாட்டிற்கு சீலு தலைமை தாங்கினார்கள். பொன்னுத்தாய் வழி நடத்தினார்கள். அருள்செல்வி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

மஞ்சுளா, மேரி குமார் ஆகியோர் இணைந்து ஆண்டு அறிக்கை வாசித்தார்கள். ஷரிப்பா, வழக்கறிஞர் ஏ. செல்வக்குமதி, சமூக செயல்பாட்டாளர் கிரேசி பானு, நவரத்தினம் முருக சரஸ்வதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 
மேரி ஷீலா நன்றி உரை நிகழ்த்தினார். அதன்பின்பு பிற்பகல் 3 மணி அளவில் பெண்கள் இணைப்பு குழு பொது குழுக்கூட்டம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மாலை 5 மணி அளவில் சிதம்பர நகர் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.


