Breaking News

துணை முதலமைச்சர், எம்.பி, மற்றும் அமைச்சர் ஆகியோரை மாநில திமுக நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் நேரில் சந்திப்பு!!

  • Share on

தூத்துக்குடி மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், திமுக துணை பொதுச்செயலாளா் கனிமொழி எம்.பி, முதன்மை செயலாளரும், நகா்புற வளா்ச்சி துறை அமைச்சரும் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என். நேரு ஆகியோரை சென்னையில் அவரது இல்லத்தில் பாளை தொகுதி பாா்வையாளரும், மாநில திமுக நெசவாளர் அணி துணை செயலாளருமான வசந்தம் ஜெயக்குமார் நேரில் சந்தித்து தொகுதி நிலவரம் குறித்தும் தனது பிறந்தநாளைெயாட்டி வாழ்த்துகளை பெற்றார்.

பின் கலந்துரையாடலின் போது திமுக தலைமைக்கும், தமிழக முதலமைச்சருக்கும் உறுதுணையாக இருந்து கழகப்பணியை நல்லமுறையில் செய்திட வேண்டும். தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு கட்சியின் கொள்கைகளையும் நல்லாட்சியில் நடைபெறும் மக்கள் நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து திமுகவிற்கு வாக்கு வங்கியை அதிகாிக்க வேண்டும்.

ஏற்கனவே தலைவர் கூறிய படி 2026 ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். என்ற இலக்கை தலைவர் நிர்ணயித்துள்ளார். அதற்கு வலுசோ்க்கும் வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சோி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் எந்த கட்சிக்கும் வாய்ப்பளிக்காமல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முழுமையாக வெற்றி பெற்றதை போல் 234 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை பெறுவதற்கு களப்பணியாற்றுங்கள் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நல்ல எதிர்காலம் நிச்சயம் அமையும் என்று கலந்துரையாடலின் போது திமுக மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமாாிடம் கூறினார்கள்.



  • Share on

ஆணவப் படுகொலைகளை தடுக்க சட்டமன்றத்தை கூட்டி உடனே தனிச்சிறப்பு சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம்!!

தூத்துக்குடியில் நடைபெற்ற போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள், ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மேயர், மற்றும் ஆணையர் ஆகியோர் பங்கேற்பு!!

  • Share on

Trending News