அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவா் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடிக்கு வருகை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
“2026 ல் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவா் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற உன்னத நோக்கத்தை கொண்டு லட்சிய பயனத்தை மேற்கொண்டு சுற்றுப்பயணம் செய்து வருகிறாா்.
அதன் 2 ம் கட்ட சுற்றுப்பயனத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 31 ம் தேதி மற்றும் 1, 2 ஆகிய 3 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறாா். அதன்படி இன்று விளாத்திகுளம் தொகுதியிலும் நாளை காலை கோவில்பட்டி மாலை ஓட்டப்பிடாரம் தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு இரவு தூத்துக்குடியில் நடைபெறும் பிரச்சாரத்தில் கலந்து கொள்கிறாா்.
பின்னா் இரவு ஓய்வுக்கு பின் 2 ம் தேதி காலை தூத்துக்குடியில் பல்வேறு பிரமுகா்களுடன் சந்திப்பு மாலை திருச்செந்தூர் தொகுதியிலும் அதன்பின் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும் தனது சுற்றுப்பயணத்தின் மூலம் பிரச்சாரத்தை மேற்கொள்கிறாா். எல்லா நிகழ்ச்சிகளிலும் தலைமை கழக மாநில நிா்வாகிகள், மாவட்ட சாா்பு அணிகள் ஒன்றிய நகர பேரூர் கிளைக் கழகம், வட்டக் கழகம் தொழிற்சங்கம் முன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் முன்னாள் இந்நாள் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி உறுப்பினா்கள் உள்பட அதிமுக அனுதாபிகள் பொதுமக்கள் என அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.