மறுமலர்ச்சி தி.மு.க. தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டமானது (31.07.2025) வியாழக்க்கிழமை பிற்பகல் 4.45 மணியளவில் கனி பேலஸ், தூத்துக்குடி (நீதிமன்ற வளாகம் எதிர்ப்புறம்) அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது.
நிர்வாகிகள் ஆர்.எஸ்.எஸ். ரமேஷ், மாவட்டச் செயலாளர் தலைமை வகிக்கிறார். தி.மு. இராசேந்திரன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர், விநாயகா ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
1. ஆகஸ்ட் 9 தலைவர் வைகோ பங்கேற்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் வெளியேற்றம் குறித்த பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்தும்
2. செப்டம்பர் 15 ல் திருச்சியில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா 117 வது பிறந்தநாள் விழா கழக மாநில மாநாடு ஏற்பாடுகள் குறித்தும்
3. இதர கழக ஆக்கப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கின்றனர்.
ஆகவே தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.