ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கலப்பைப்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கடையை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் சங்க செயலாளர் அகிலா, உதவி பொறியாளர் பால நமச்சிவாயம், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், பணி மேற்பார்வையாளர் சங்கர், ஊராட்சி செயலர் மாரிக்கனி, விற்பனையாளர் சத்தியசீலன், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயலட்சுமி, மகளிரணி பாக்கியலட்சுமி, திருப்பதி சுந்தரி கிளைச் செயலாளர்கள் முருகன், வில்லியம் பாஸ்கர் கிளை பிரதிநிதி ஜோசப், ஊர் நாட்டாமை வேல்சாமி மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
