தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி மாநகர BLA 2 பாக முகவர்கள் கூட்டம் இன்று மாலை எட்டையபுரம் ரோடு கலைஞர் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரும், தென்மண்டல தேர்தல் பொறுப்பாளருமான எம்.பி. கனிமொழி கருணாநிதி தலைமை தாங்கி தலைமையுரை நிகழ்த்தினார். அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலை வகித்து விளக்கவுரை ஆற்றினார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை செயலாளர் ராஜ் மோகன் செல்வின், பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, தொகுதி பொறுப்பாளர் இன்பா ரகு, பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள், கிளை கழக நிர்வாகிகள், வட்ட பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள், பாக உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இறுதியில் பாக முகவர்கள் அனைவருக்கும் வேட்டி, சட்டை சேலையை எம்.பி. கனிமொழி கருணாநிதி வழங்கினார்.
