திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவித்தபடி "ஓரணியில் தமிழ்நாடு" எனும் தலைப்பில் திமுக உறுப்பினர் சேர்க்கையை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன் ஆகியோர் தூத்துக்குடி போல் பேட்டை மேல தெரு பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று இருக்கையில் அமர்ந்து திமுக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தனர்.

அப்போது எம்.பியும், அமைச்சரும் வீட்டு உரிமையாளர்களிடம் தமிழக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கி கூறியும், தங்கள் வீடுகளில் உள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கிறதா, அல்லது யாரேனும் பயன் பெறுகிறார்களா, புதுமை பெண் திட்டத்தின் கீழ் தங்கள் இல்லங்களில் உள்ள பெண்கள் யாரேனும் பயன் பெறுகிறார்களா, விடியல் மகளிர் பேருந்துகளில் பயணம் செய்கிறீர்களா, என்று பண்போடு கேட்டு உங்கள் இல்லங்களில் உள்ள நபர்கள் திமுக உறுப்பினர்களாக விருப்பம் தெரிவித்தால் உடனே தங்களை திமுக உறுப்பினர் சேர்க்கை பட்டியலில் இணைத்து கொள்கிறோம்.
திமுக உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் தங்களது விபரங்களை தெரிவித்தால் உடனே பதவி செய்யப்படும் அதோடு தங்களை திமுக உறுப்பினர்களாக உடனே இணைத்து கொள்ளப்படும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க வீட்டின் உரிமையாளர்கள் ஆர்வத்தோடு தங்களது விபரங்களை தெரிவித்து தங்களது இல்லங்களில் உள்ள நபர்களை திமுக உறுப்பினர்கள் ஆக்கி கொண்டனர்.

அதைத்தொடர்ந்து போல் பேட்டை கிழக்கு பகுதியில் உள்ள வீடுகளுக்கும் அமைச்சர் நேரடியாக சென்று உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தில் குடும்ப உறுப்பினர்கள் விபரங்களை கேட்டு பெற்று அமைச்சரே படிவத்தை பூர்த்தி செய்து திமுக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். பின்னர் வீட்டு உரிமையாளர்களின் அனுமதி பெற்று வாசலில் "ஓரணியில் தமிழ்நாடு" என்ற வாசகம் பொருந்திய ஒட்டு வில்லையை ஒட்டினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உட்பட மாநில நிர்வாகிகள் கழக செயல்வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
