தூத்துக்குடியில் உலக மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், மற்றும் தமிழ்நாடு HMS உழைப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி விருதுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா இன்று காலை மணி நகரில் உள்ள சந்திரா திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

தேசிய துணைத் தலைவர், உலக மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் டாக்டர்.ராஜலெட்சுமி, HMS, பிராந்திய ஆலோசனைக் குழு உறுப்பினர், தேசிய தொழிலாளர் கல்வி மற்றும் வளர்ச்சி வாரியம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் டாக்டர். ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக வெற்றிக் கழகம் மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல் ராஜ், தொழிலதிபர் உரிமையாளர் ஸ்னோ ஷிப்பிங் (தமிழக வெற்றிக் கழகம்) எஸ்.எம். கிஷோர், கனி குரூப்ஸ் ஆப் கம்பெனி உரிமையாளர் ஜெயம், காவல் ஆய்வாளர் மாவட்ட ஆயுதப்படை பாளையங்கோட்டை பேச்சிமுத்து, உதவி ஆய்வாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ராஜா, போர்ட்யுனைடெட் ஜெனரல் ஒர்க்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் ஜான் கென்னடி, தமிழ்நாடு முன்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் வட்டத்தலைவர் வினோத், மாவட்ட தலைவர் ஷாஜகான், ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி விருதுகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் திரளான மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உலக மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தமிழ்நாடு ஹச்.எம்.எஸ் உழைப்பாளர் சங்கம் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

