Breaking News

"காலம் பொன் போன்றது” "இளமையில் கல், பருவத்தே பயிர் செய்" - வழக்கறிஞர் ரமேஷ்பாண்டியன்!!

  • Share on

காலத்தின் அருமையை அறிந்து அதற்கேற்ப செயல்படுபவர்கள் தான்  வாழ்க்கையில் வெற்றி பாதையில் செல்வார்கள். ஏனென்றால், நம் கற்கவேண்டிய விஷயங்களையோ அல்லது செய்ய வேண்டிய செயல்களையோ தகுந்த காலத்தில் செய்வதால் மட்டுமே அதற்கேற்ற பலன்களை பெற முடியும்.

எந்தவொரு விஷயத்தையும் நாம் காலம் அறிந்து செய்து வந்தோம் என்றாலே, அது நமக்கு நல்ல பலன்களை மட்டுமே அளிக்கும். திரும்ப பெற முடியாத விஷயம் என்னெவென்றால் அது நாம் கடந்து வந்த காலம் மட்டுமே. எனவே, காலத்தினை நாம் எப்படி பயன்படுத்துகிறோமோ அதுபோலத்தான் நம் வாழ்க்கை இருக்கும்.

மனித வாழ்க்கையில் காலம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. காலம் எதற்காகவும், யாருக்காகவும் காத்திருக்காமல் முன்னோக்கி சென்று கொண்டே இருக்கும். அதன்படி, நாமும் காலத்தின் வேகத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் பயனுள்ள விஷயத்திற்காக பயன்படுத்த வேண்டும்.

காலம் ஒருபோதும், எதற்காகவும், யாருக்காகவும் நிற்பதில்லை எனவே, நம் வயதிற்கேற்றவாறும் காலத்திற்கு ஏற்றவாறு செய்யவேண்டிய கடமைகளை செய்து முடித்தல் வேண்டும். காலம் தவறி செய்த செயல்கள் யாவும் முழுமையடையாது. இதனை தான் நம் முன்னோர்கள், “ இளமையில் கல், பருவத்தே பயிர் செய் ” என்று குறிப்பிடுகிறாரக்ள்.

அதாவது இளமையில் கற்காமல் விட்டுவிட்டு அந்த கல்வியை பின்பு கற்றாலும் அதனால் பயனேதும் இல்லை பருவம் பார்த்தே பயிர் செய்ய வேண்டும். பருவம் தப்பினால் பயிர்கள் செழித்து வளராது. " இளமையில் கல், பருவத்தே பயிர் செய் "என்கிற பழமொழியை அனைவரும் உணர வேண்டும். அந்தந்தப் பருவத்தில் அந்தந்த செயலை செய்து முடித்திட வேண்டும்.

இதனை “ காற்றுள்ள போதே தூற்றிக்கொள் ” என்றும் கூறுவார்கள். காலம் இருக்கும்போதே வாய்ப்புகளை தவறவிடாமல் செய்து முடிக்க வேண்டும். காலம் கடந்து செய்வதன் மூலம் அதனால் எந்த பயனும் இல்லை உலகின் சிறந்த ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட் ஒலிம்பிக் விளையாட்டில் ஒன்பது தங்கப்பதக்கங்களைப் பெற்றவர். இவர் தங்க பதக்கம் பெற இரண்டு நிமிடங்கள் தான் ஆனது. ஆனால், அவர் வெற்றியாளராக மாற 20 வருடங்களாக காலத்தை சரியான முறையில் பயன்படுத்தியதே காரணம் ஆகும். எனவே, நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் என்பதற்கு உசைன் போல்ட் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.

இவ்வாறு எந்த ஒரு மனிதர் காலத்தின் நேரத்தை சரியான முறையில் பயன்டுத்தி வருகின்றானோ அவனே சரியான பாதையில் பயணிக்கின்றான் என்று அர்த்தம். இவை அனைத்திற்க்கும் மேலாக அவன் காலத்தை சரியான முறையில் பயன்படுத்தியதற்கான பலன்களையும் பெறுவான்.
எனவே, எந்தவொரு விஷயத்தையும் காலத்தின் நேரத்திற்கு ஏற்றவாறு திட்டமிட்டு பயன்படுத்துதல் வேண்டும். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் அனைவருமே அவர்களுக்கு  அளிக்கப்பட்ட நேரத்தை சரியாக பயன்படுத்தியவர்களே ஆவர். எனவே, காலத்தை கவனமாக கையாள வேண்டும்.

நீங்கள் செய்ய நினைத்த விஷ்யங்களை அன்றே செய்யாமல் நாளைக்கு செய்யலாம் என்று தள்ளிப்போடும் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் தேவையற்று வீணடித்த நேராகவே கருதப்படும். எனவே, காலத்தை உங்கள் வாழ்வில் வெற்றி அடையும் பொன்னான நேரமாக நினைத்து செலவிட்டு வாழ்க்கையில் முன்னேறுங்கள். நம் முன்னோர்கள் கூறியது போல " காலம் பொன் போன்றது " " இளமையில் கல், பருவத்தே பயிர் செய் " கல்வியே மிகப்பெரிய ஆயுதம், நாம் கற்ற கல்வியை மட்டும் நம்மிடத்தில் இருந்து எவராலும் பறித்து கொள்ள முடியாது. செல்வத்தில் உயர்ந்த செல்வம் கல்வி செல்வம் என்று வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தனது வாட்ஸ் அப் பக்கத்தில் தனது புகைப்படத்தை பதிவு செய்து இளைஞர்கள் வரும் காலங்களில் நேரத்தை சரியான முறையில் பயனுள்ளதாக செலவு செய்ய வேண்டும் என்று சொல்லாமல் சொல்லி அறிவுறுத்தியுள்ளார்.


  • Share on

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் - ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தகவல்!!

ஒட்டப்பிடாரம் சண்முகையா எம்எல்ஏ தென்னம்பட்டி ஊராட்சி கோபாலபுரம் கிராமத்தில் ரூ.16.51 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்!!

  • Share on

Trending News