தூத்துக்குடி மாவட்ட ஐஎன்டியுசி தலைமையகத்தில் வைத்து இன்று (21.06.2025) காலை மாவட்ட ஐஎன்டியுசி தலைவர் ராஜகோபாலன் தலைமையில் ஐஎன்டியுசி செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் தேசிய INTUC அமைப்புச் செயலாளர் P. கதிர்வேல் முன்னிலை வகித்தார். ஐஎன்டியுசி மாவட்ட சங்கத்திலிருந்து தலைவர் கருப்பசாமி, மைக்கேல், சங்கர், சிவராஜ், ஸ்டீபன், குட்டிராஜ். மேலும் துறைமுக INTUC சேர்மதுரை, சேகர், பால்ராஜ், சண்முகையா முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
உப்பள INTUC சங்கத்திலிருந்து செயலாளர் ஸ்டாலின், கண்ணன் சாமுவேல், குட்டி, பண்டாரம். ரோசிட்டா ஆகியோரும் இந்திய உணவுக் கழக INTUC சங்கத்திலிருந்து வீரையோ, காசி, பாண்டி, முருகன், பெரியசாமி, ரமேஷ், பாஸ்கர், சிவகுமார், முத்துப்பாண்டி, உதயசூரியன், ஆகியோரும் ரயில்வே INTUC சங்கத்திலிருந்து பாலகிருஷ்ணன், பாலசுப்ரமணியம், முருகன் ஆகியோரும் கோவில்பட்டி INTUC யில் இருந்து ராஜசேகர், மின்சார தையல்சங்கம் INTUC யில் இருந்து மனோகர், DCW INTUC லிருந்து முருகன், EB INTUC சங்கத்திலிருந்து மாரிமுத்து, சர்தார், வரதராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
செயற்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது :-
1. வேலையில்லா திண்டாட்டம், வேலை பார்க்கின்ற தொழிலாளார்களுக்கு எந்தவித பணி பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலையில் கீழ்கண்ட உரிமைகளை பெற்றிட வருங்கால வைப்பு நிதி, பென்ஷன், மருத்துவ உதவி, விபத்து கால நஷ்டஈடு கிராஜுவிட்டி ஆகியவற்றை வழங்க வேண்டும். இது தனியார் துறையிலும் தினக்கூலிகளாக உள்ளவர்களுக்கு சாத்தியமா என்றால் சாத்தியம் இல்லை ஆனால் அரசின் பல்வேறு திட்டங்களால் இதை சாத்தியப்படுத்த முடியும் எல்.ஐ.சி. யின் ஒரு முறை பாலிசியில் இத்திட்டம் உள்ளது. இதை மத்திய மாநில அரசுகள் பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும்
2. இதை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் அமல்படுத்த வேண்டும். அதனை அரசு தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். இதனை வைத்திருப்பவர்கள் மட்டும் வேலைக்கு அமர்த்த வேண்டுமென்றும் அப்படி அமர்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கு சம்பளத்தை நேரில் கொடுக்காமல் வங்கியின் மூலமாகவே வழங்க வேண்டும். இந்த சம்பளம் அரசு ஊழியர்களுக்கு உள்ள சம்பளத்தில் 50% இருந்து 60% வரை நிர்ணயிக்க வேண்டும். இது மாத சம்பளத்தில் 26 ல் வகுத்தல் செய்து ஒரு நாள் சம்பளத்தை நிர்ணயம் செய்யவும் இதை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மூலம் அமல்படுத்த வேண்டும்.
3. அரசாங்கம் நியமிக்கின்ற குறைந்தபட்ச சம்பளம் என்பது பொருத்தமாக இல்லை, அந்த உதாரணமாக கொத்தனார்களுக்கு 450 ரூபாய் என்றும் சித்தாளுக்கு 290 என்று சம்பளத்திற்கு யாருமே வேலைக்கு வருவதில்லை, குறைந்த சம்பளத்தை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். ஆனால் நடைமுறை கொத்தனார் 1000 ரூபாய் விருந்து 1300 வரையும், சித்தாளுக்கு 500 லிருந்து 800 ரூபாய் வரையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
4. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலிப் பணியிடத்தில் சுமார் 40,000 தொழிலாளர்கள் தின கூலிகளாக பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். பணியின் போது ஏற்படுகின்ற விபத்து மற்ற காரணங்களால் பாதிக்கப்படுகின்ற பொழுது தொழிலாளர்களுடைய குடும்பம் தெருவில் நிற்கதியாக நிற்கின்றது. ஆகையால் தொழிலாளர்களை நிரந்தப்படுத்தாமல் விட்டாலும் கூட அனைத்து சட்டரீதியான சலுகைகள் கிடைக்க அரசாங்கம் ஆவணம் செய்ய வேண்டும்.
5. தமிழகமெங்கும் டாஸ்மாக்கில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் பல ஆண்டு காலம் பணியாற்றியும் டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் உடனடியாக அமல்படுத்துமாறு இக்கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
6. அமைப்பு சாரா தொழிலாளர்கள் என்ற அமைப்பு பெயரளவில் பெயருக்கு தான் இருக்கிறதே தவிர நடைமுறையில் எந்த பலனும் அளிக்கவில்லை, பலன் அளிக்க வேண்டும் என்றால் வேலை வாங்கும் முதலாளியை அரசு கட்டாயப்படுத்தி சட்ட உரிமைகளை அமல்படுத்த வைக்க வேண்டும்.
7. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றிய துறைமுகத்தில் இன்று புதிய நிரந்தர வேலை என்பது அறவே இல்லை மாறாக அனைத்து பிரிவுகளிலும் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை பணியில் அமர்த்துகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எந்த விதமான பணி பாதுகாப்பும் இல்லை, இதை உடனடியாக துறைமுக சபை நிர்வாகம் சரி செய்ய வேண்டும்.
8. மேற்கண்ட கோரிக்கைகளை பொதுமக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி செயற்க்குழு கூட்டத்தின் வாயிலாகவும், நோட்டீஸ் விநியோகம் மூலமும் எடுத்துச் சொல்ல வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
இறுதியில் தலைவர் N.H.W.U. M. கருப்பசாமி நன்றியுரை நிகழ்த்தினார்.