தூத்துக்குடி மாநகராட்சி பிரையன்ட் நகர் 12 மற்றும் கட்டபொம்மன் நகர் பகுதியில் தடம் எண் N1 நகர பேருந்தானது கொரோனா காலம் முன்புவரை இயக்கப்பட்டது. பின்னர் கொரோனா காலம் என்பதால் பிரையன்ட் நகர் பகுதியில் இயக்கப்பட்டு வந்த நகர பேருந்து திடீர் என்று நிறுத்தப்பட்டது.
கொரோனா காலம் முடிந்த பிறகு மீண்டும் நகர பேருந்து இயக்கப்படவில்லை, எதற்காக தடம் எண் N1 நகர பேருந்து ஏன் நிறுத்தப்பட்டது என்ற காரணம் தெரியவில்லை, மீண்டும் தடம் எண் N1 நகர பேருந்தை இயக்க கோரி இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவனை அவரது இல்லத்தில் பிரையன்ட் நகர் பகுதி பொதுமக்கள் சார்பில் மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, நிர்வாகிகளுடன் அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
அமைச்சரிடம் அளித்த மனுவில் தெரிவித்ததாவது ;-

தூத்துக்குடி பகுதியான பிரையண்ட்நகர் மற்றம் கட்டபொம்மன் நகர் 12 வரைக்கு தடம் எண் N1 அரசு நகர பேருந்து ஓடியது. சில வருடங்களாக அந்த பேருந்து நிறுத்தப்பட்டது. ஆகையால் பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் மாற்றுதிறனாளிகள் பஸ்வசதி இல்லாமல் சிரமப்படுகிறார்கள்.
ஆகையால் நிறுத்தப்பட்ட தடம் என் N1 அரசு பேருந்தை காலை முதல் இரவு வரை மீண்டும் கட்டபொம்மன் நகர் பகுதிக்கு இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று அமைச்சரிடம் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவின் போது தூத்துக்குடி மாவட்ட மதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.