பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டைக்கு தமிழக ஆளுநரின் வழிகாட்டுதலின்படி தமிழக ஆளுநர் மாளிகையிலிருந்து பேராசிரியர் முனைவர். ஜெயலட்சுமி தலைமையில் உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பணராஸ் பல்கலைக்கழக தத்துவம், வரலாறு மற்றும் தமிழ்த்துறை பிரிவு மாணவ, மாணவிகள் 30 பேர் கொண்ட குழு பாஞ்சாலங்குறிச்சிக்கு வருகை தந்தனர்.

பாஞ்சாலங்குறிச்சிக்கு வருகை தந்த மாணவ, மாணவிகளுக்கு வீரசக்க தேவி ஆலய குழு தலைவர் முருகபூபதி கட்டபொம்மன், மற்றும் ஊமைத்துரை வரலாறுகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கட்டபொம்மனின் வீர வரலாறுகளை எடுத்துக் கூறினார்.
அதைத்தொடர்ந்து வீரசக்க தேவி ஆலய குழு சார்பாக சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சிக்கு வருகை தந்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வீரசக்க தேவி ஆலய குழு செயலாளரும், மருகா ஹோட்டல் உரிமையாளருமான செந்தில்குமார் மற்றும் வீரசக்க தேவி ஆலய கோவில் பூசாரி ஆகியோர் உடன் இருந்தனர்.
