Breaking News

தூத்துக்குடி அய்யனார்புரத்தில் அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் இடத்தை மீட்டெடுக்க வேண்டி மூத்த பத்திரிகையாளர் டி.எஸ்.எஸ். மணி கோரிக்கை!!

  • Share on

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் ஒன்றியம் கீழரசடி பஞ்சாயத்து அய்யனார்புரத்தில் அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் தரை இடத்தை மீட்டெடுக்க வேண்டி மூத்த பத்திரிக்கையால் டி.எஸ்.எஸ். மணி கள ஆய்வு செய்து அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.


சென்னையில் இருந்து மூத்த ஊடகவியலாளர் தோழர் டி.எஸ்.எஸ். மணி கீழரசடி பஞ்சாயத்து அய்யனார்புரம் கிராமத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் அய்யனார் புரம் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் தரை மற்றும் அனாதினம் என்று வகைப்படுத்தப்பட்ட இடத்தை பார்வையிட்டார்.


தூத்துக்குடிக்கு வருகை தந்த மூத்த பத்திரிகையாளர் டி.எஸ்.எஸ். மணியை தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் மாநில தலைவர் தாமு காந்தி மற்றும் அங்குள்ள பொறுப்பாளர்கள் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் முருகன், மாநில செயலாளர் ஹரிராம், மாநில இளைஞரணி செயலாளர் எபநேசர், மாவட்ட செயலாளர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர் ஆனந்த், மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் பொன்ராஜ், மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர் தனலட்சுமி, ஜே. பிராட்டி, ஆகியோர் வரவேற்றார்கள்.


பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் கடந்த பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் உத்தரவு வழங்கப்பட்ட ஆக்கிரமிப்பு இன்னும் அகற்றப்படாமல் இருக்கிறது. இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் இந்த இடத்தில் உப்பு உற்பத்தி செய்து பல கோடி பணம் சம்பாதித்து வருகிறார்கள். இவர்கள் அரசுக்கு எந்தவிதமான வரியும் மற்றும் கட்டுக்குத்தையும் செலுத்தப்படுவது கிடையாது.

அரசு ஏற்கனவே அரசாணைப்படி மேய்ச்சல் தரை என்று வகைப்படுத்தப்பட்ட இடத்தை வேறு எந்த வகையான பயன்பாட்டிற்கும் பயன்படுத்தக் கூடாது. என்று 2001ஆம் ஆண்டு அரசாணை எண் 186 படி உத்தரவு வழங்கி இருக்கிறது. அந்த உத்தரவை எந்த அதிகாரியும் பின்பற்றப்படவில்லை, எனவே அரசு கீழரசடி பஞ்சாயத்து அய்யனார்புரம் துப்பாசுபட்டி கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் மற்றும் தரை என்று வகைப்படுத்தப்பட்ட இடத்தையும் அனா தினம் என்று வகைப்படுத்தப்பட்ட இடத்தையும் மற்றும் தீர்வை ஏற்படுத்தப்பட்ட தரிசு நிலத்தையும் உடனடியாக மீட்டெடுத்து அந்தப் பகுதியில் குடியிருக்கும் ஏழை மட்டும் பட்டியலின, பழங்குடி மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும்.

இது சம்பந்தமாக மாண்புமிகு துணை முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு அவர்கள் விரைவாக நடவடிக்கை எடுத்து இந்த இடத்தை மீட்டெடுக்க வழிவகை செய்யப்படும் என்று கூறினார். அய்யனார் புரம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தொடர்ந்து வருகை தந்ததற்கு அந்த பகுதியில் உள்ள தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்கள் நன்றி தெரிவித்தார்கள்.


  • Share on

தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை கனிமொழி கருணாநிதி வழங்கினார்!!

மத்திய அரசு உள் கட்டமைப்புகளுக்கு வழங்கி பணத்தை தமிழக அரசு திருப்பி அனுப்பியது முதல் பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தூத்துக்குடியில் பாஜக மாநில மகளிரணி உமா ரதிராஜன் பரபரப்பு பேட்டி!!

  • Share on

Trending News