Breaking News

கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு திமுக ஐடி விங் சார்பில் அமைச்சர் கீதாஜீவன் மாணவிகளுக்கு அறுசுவை உணவு வழங்கினார்!!

  • Share on

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு அறுசுவை விருந்தை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர், திமுக தலைவர் கருணாநிதி 102 வது பிறந்தநாளை முன்னிட்டு, வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் அபிராமிநாதன் தலைமையில், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலையில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், தூத்துக்குடி புனித அலாசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்கி பயிலும் விடுதி மாணவிகளுக்கு அறுசுவை உணவை வழங்கினார்கள்.

முன்னதாக தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவிகள் பிறந்தநாள் ஜெபம் செய்தனர்.
மாணவிகளிடம் அமைச்சர் பி.கீதாஜீவன் பேசுகையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கல்வி என்பது மாணவர்களுக்கு மிக மிக முக்கியம் அதற்கு எந்த தடையும் வந்து விடக்கூடாது. என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக் கல்வித்துறைக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதிகப்படியான நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாணவ, மாணவிகள் கல்வி கற்பதில் மட்டுமே கவணம் செலுத்த வேண்டும். கல்விதான் உங்களை உயர்த்தும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ்,  வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, அந்தோணி கண்ணன், தூத்துக்குடி தொகுதி ஒருங்கிணைப்பாளர் சி.ன். அண்ணாதுரை, வைதேகி எம்.சி, பகுதி ஒருங்கிணைப்பாளர்கள்  
சுரேஷ்குமார், மகேஸ்வரி,  ஜோயல், சந்தன முனிஸ்வரன், உமா மகேஷ், ஆனந்த்,  பிரிஸ்கா, 40 வது வட்டச் செயலாளர் டென்சிங், கவுன்சிலர் பவானி மார்ஷல், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பகுதி மகளிரணி கமலி, சிரான் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




  • Share on

நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் டோல் கேட் கட்டணம் வசூல் - என்ன சொல்கிறார் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாவட்ட செயலாளர் அரி ராகவன்!!

தூத்துக்குடியில் அகில இந்திய கட்டுநர் (மையம் ) சங்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வு பேரணி!!

  • Share on

Trending News